இரு சின்னத்திரை தொடர்கள் பற்றி!
"மெட்டி ஒலி" (நான் பார்த்த வரை) குடும்ப சச்சரவுகளையும், ஆணாதிக்கத்தயும் அதிகமாக பிரதிபலிப்பது போல் தோன்றினாலும், எல்லோரும் ரசிக்கத்தக்க வகையில் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. தந்தை மகள்களுக்கு இடையே உள்ள கவிதை கலந்த உறவை, இயக்குனர் திருமுருகன் நேர்த்தியாக, கதையில் வரும் சில நிகழ்வுகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். செல்வம் என்ற கதாபாத்திரத்திரம், நிஜ வாழ்வில் பல ஆண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கத் தக்க வகையில் வடிவமைக்கப்பட்டதோடு, அதில் நடிப்பவரும் பாத்திரத்தை உள்வாங்கி, மிக அருமையாக நடித்துள்ளார்.
அதே நேரம், "மெட்டி ஒலி" யை தொடர்ந்து வரும் "அண்ணாமலை"யில் வரும் நிகழ்வுகள் (குறிப்பாக, தந்தை, மகளுக்குத் தெரிய, கள்ள உறவு பாராட்டுவது, ஓரு பெண் வெட்கமற்று இன்னொருத்தியின் கணவனை அடைய முயல்வது, போதை மருந்து பழக்கத்தை முன்னிலைப்படுத்துவது, தீய குணமுள்ளோரையே அதிகமாக காட்டுவது) அதை அனைத்து சாராரும் பார்க்கத் தக்க ஒரு தொடருக்கு வேண்டிய தகுதியை குலைக்கும் வகையில் அமைந்துள்ளன. "சித்தி"யை வழங்கிய ரேடான் "அண்ணாமலை" கதையை இவ்வாறு எடுத்துச் செல்லும் விதம் வருத்தத்துக்குரியது.
2 மறுமொழிகள்:
நீங்கள் கூறியிருப்பது மிகவும் உண்மை. எங்கள் வீட்டில் ஆறு bachelorகள் தங்கியுள்ளோம். எங்கள் அனைவருக்கும் கூட மெட்டி ஒலி பிடித்திருக்கிறது, நாங்கள் தவறாமல் பார்த்து வருகிறோம்.
அண்ணாமலை படு குப்பை.
உங்கள் BLOGs-ஐ பார்த்தேன். Kahlil Gibran கவிதைகள் பற்றிய அலசல் மற்றும் "நான் வீழ்வேனென்று
நினைத்தாயோ?" என்ற posting அருமை! இத்தனை Blogs maintain செய்வதற்கு எப்படி தங்களால் இயலுகிறது
என்ற ஆச்சிரியம் எழுந்தது!!!!
Post a Comment